காஷ்மீர் என்கவுண்டரில் ஒரு ராணுவ வீரர் பலி – 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்திலுள்ள பனார் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இது குறித்து பாதுகாப்பு செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “பனார் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்த முழு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என கூறினார்.