Categories: இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..!

Published by
Dinasuvadu desk
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ‘ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி (வயது 50). இவர் நேற்று தனது அலுவலகத்தில் இருந்து காரில் லால்சவுக் என்ற இடத்தில் நடைபெறும் இப்தார் விருந்துக்காக சென்றுகொண்டிருந்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட சிலர் இருந்தனர். பத்திரிகை அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த சிறிது நேரத்தில் அவரது கார் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதில் சுஜாத் புகாரியும், ஒரு பாதுகாப்பு அதிகாரியும் அந்த இடத்திலேயே குண்டு காயமடைந்து பரிதாபமாக இறந்தனர். மற்றொரு போலீஸ்காரர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி இந்த சம்பவத்துக்கு கண்டனமும், புகாரி மரணத்துக்கு இரங்கலும் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில்,  சுஜாத் புகாரி வீட்டிற்கு காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு சுஜாத் புகாரியின் உடலுக்கு உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்தனர். பின்னர்  சுஜாத் புகாரி இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Recent Posts

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

16 minutes ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

3 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

3 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

4 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

23 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

24 hours ago