காஷ்மீரில் 3 சிறுவர்களின் கொடூர கொலை மற்றும் பத்திரிகையாளரின் மர்ம மரணம் ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாத குழுக்கள் நாளை ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதுபற்றி பிரிவினைவாத குழுக்களின் ஒருங்கிணைந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜம்முவில் பத்திரிகையாளர் சுஜாத் புகாரி என்பவர் கடந்த 14ந்தேதி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது 2 பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர்.
இதேபோன்று இந்திய படையினரால் 3 இளம் சிறுவர்கள் கொடூர முறையில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். மற்றொரு சிறுவன் ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறான்.
இந்த கொடூர படுகொலை பற்றி சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீரில் தொடர்ச்சியாக பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இதனை கண்டிக்கும் வகையில் நாளை ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…