காஷ்மீரில் பத்திரிகையாளர் படுகொலை : முழு அடைப்புக்கு பிரிவினைவாத குழுக்கள் அழைப்பு..!

Default Image

காஷ்மீரில் 3 சிறுவர்களின் கொடூர கொலை மற்றும் பத்திரிகையாளரின் மர்ம மரணம் ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாத குழுக்கள் நாளை ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதுபற்றி பிரிவினைவாத குழுக்களின் ஒருங்கிணைந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜம்முவில் பத்திரிகையாளர் சுஜாத் புகாரி என்பவர் கடந்த 14ந்தேதி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.  அவரது 2 பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று இந்திய படையினரால் 3 இளம் சிறுவர்கள் கொடூர முறையில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.  மற்றொரு சிறுவன் ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறான்.

இந்த கொடூர படுகொலை பற்றி சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீரில் தொடர்ச்சியாக பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்.  இதனை கண்டிக்கும் வகையில் நாளை ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்