காஷ்மீரில் அதிகாலையிலேயே நிலநடுக்கம்
காஷ்மீரில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு அங்குள்ள வீடுகள் லேசாக குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.1 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.
இதற்கு முன்னல் நேற்று, இமயமலை பகுதியில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் நேற்று இரவு 8.49 மணிக்கு திடீரென பூமி அதிர்வு ஏற்பட்டது. இந்த பூமி அதிர்ச்சி ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. பூமிக்கு அடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
மேலும் பூமி அதிர்ச்சியினால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அங்கிருந்தவர்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. மேலும், டெல்லி, சண்டிகார் நகரங்களிலும், பஞ்சாப் மாநிலத்திலும் இந்த பூமி அதிர்ச்சி உணரப்பட்டது.