காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில்…!! எது சிறந்ததோ அதை மத்திய அரசு செய்யும்…!!!
மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் எது சிறந்ததோ அதை மத்திய அரசு செய்யும். அவரவர் மாநில நோக்கின் அடிப்படையில் இது பார்க்கப்படுகிறது. காவிரி விவகாரத்தை மத்திய அரசு கூட்டாட்சி அடிப்படையில் பார்க்கிறது.
காவிரி விவகாரத்தில் காவிரி வாரியமோ அல்லது மற்ற எதுவுமோ பெயரில் எதுவும் இல்லை. அதன் செயல்பாடுகளைத்தான் பார்க்க வேண்டும்.உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்படுகிறது. தீர்ப்பை அமல்படுத்துவதற்கான ஸ்கீம் வகுக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பை இணைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக உச்ச நீதி மன்றம் தெரிவித்து உள்ளது என கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்