காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடரும்…!
அதிமுக எம்.பி.,யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது, காவிரி விவகாரத்தில் ராஜினாமா செய்வது தீர்வாகாது. முத்துக்கருப்பன் எம்.பி.,யின் ராஜினாமா முடிவு, அவருடைய தனிப்பட்ட விருப்பம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடரும் என்றும் எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம். நாடாளுமன்றம், மற்றும் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களால் மேலாண்மை வாரியம் அமையும் என நம்பிக்கை உள்ளது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.