காவிரி மேலாண்மை ஆணையம்:கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு?
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வருகின்ற ஜூலை மாதம் 2ஆம் தேதி நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கர்நாடக அரசு தலைமையில் இன்று அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது.பெங்களூருவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எம்பிக்கள்,எம்எல்ஏக்கள் மற்றும் எதிர்கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடரில் அனைத்து எம்பிக்களும் காவிரி விவகாரம் குறித்து பிரச்னை எழுப்ப திட்டம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.