காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 6 வார காலத்திற்குள் காவிரி நீர் பங்கீட்டிற்கான ஸ்கீமை செயல்படுத்துமாறு, கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், 6 வார கால அவகாசம் முடிந்த பின்னர், தீர்ப்பில் கூறியுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த இரண்டு வழக்குகளும், இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிலேயே காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கூறப்பட்டுள்ளதாகவும், அந்த தீர்ப்பை இணைத்தே, தாங்கள் தீர்ப்பு வழங்கியதாகவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
மேலும் நதி நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவிட்ட பிறகு, நீதிமன்றம் அனைத்தையும் கண்காணித்து கொண்டிருக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை மே 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வதில் இருந்து, மத்திய அரசு தப்பிக்க முடியாது என்றும், தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தை குறித்து தற்போது எதையும் கூற முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல்,கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், ஆண்டுதோறும் தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதேநேரத்தில், தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்துவது கடமை என்றும், அதுவரை தமிழக, கர்நாடக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு கடைசி நேரத்தில் விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி தொடர்பான செயல் திட்டத்தை சமர்பிக்க மேலும் 2 வார கால அவகாசம் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கோரிக்கை மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.மே. 3 ஆம் தேதி காவிரி வழக்கு விசாரணைக்கு வரும்போது மனு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
மே 3-ம் தேதி காவிரி தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…