காவிரியின் குறுக்கே மத்திய அரசின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மஜத தலைவர் குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு, முதல்முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார் கர்நாடக முதல்வர் குமாரசாமி .இந்த பட்ஜெட்டில் முதல்கட்டமாக 2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார்.
மேலும் இந்திரா கேண்டீனை விரிவுபடுத்தவும் அறிவிப்பை வெளியிட்டார்.இது குறித்த அறிவிப்பில் புதிதாக 247 இந்திரா கேண்டீன் திறக்கப்படும்.இது கர்நாடகாவில் உள்ள அனைத்து தாலுகாக்கள் ,மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் திறக்கப்படும்.ரூ.211 கோடி செலவில் இவை புதிதாக திறக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ரூ.25,000 வரை விவசாய கடன் செலுத்தி இருந்தால் திருப்பி அளிக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
பின்னர் பெங்களூருவின் தண்ணீர் தேவைக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் மத்திய அரசின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…