காவல்துறையினரை மோசமாகத் திட்டுவதற்காகவே 1,264 அழைப்புகள்!டார்ச்சர் செய்தவர் கைது…..
போலீசார், குஜராத் மாநிலத்தில் காவல்துறையினரை மோசமாகத் திட்டுவதற்காகவே 1264 தொலைபேசி அழைப்புகள் செய்தவரை கைது செய்தனர். அகமதாபாத் மாவட்டம் கமாட் (Kamod) என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் போய் (Ishwar Bhoi). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர், நில விவகாரம் ஒன்றில் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் போலீசாருக்கு எதிராக பழி உணர்ச்சியை வளர்த்துக் கொண்ட அவர், காவல்துறை கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு காவல் மையங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாய்க்கு வந்தபடி திட்டத் தொடங்கியதாக கூறப்படுகிறது. பெண் போலீசார் எடுத்தால் அவரது வார்த்தைகள் மேலும் தரக்குறைவாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவரைக் கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவந்த போலீசார் ஒருவழியாகக் கைது செய்தனர். பின்னர் அவர் பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.