கால்சென்டர் மோசடி தொடர்பாக இந்திய வம்சாவழியினருக்கு சிறை..!
இந்தியாவில் கால்சென்டர் மோகம் அதிகமாக உள்ளது.குறிப்பாக இளைஞர்கள் தான் இதில் அதிகம் இருக்கின்றனர். இந்தியாவின் பல இடங்களைச் சேர்ந்த கால்செண்டர்கள் உதவியுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் போலவும், நிதி நிறுவனங்களில் இருந்து பேசுவது போலவும் பேசி அமெரிக்க மக்களிடம் கோடிக்கணக்கான டாலர்கள் ஏமாற்றப்பட்டதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக அமெரிக்காவின் பன்னாட்டு குற்றவியல் அமைப்பு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து மோசடி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததாக 21 இந்திய வம்சாவழியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்க நீதிமன்றம் 4 முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில், தண்டனைக்குப் பிறகு அனைவரும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கால்சென்டர் மோசடி தொடர்பாக 21 இந்திய வம்சாவழியினருக்கு 4 முதல் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை