காலக்கெடு முடியும் நேரம் !!! : அதார் இணைப்புகள் !!!!
இந்தியாவில் அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்க பட்டுவிட்டது. இதனை எதிர்த்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சில வழக்குகளுக்கு ஆதார் எண் இணைக்க கால அவகாசம் நீடிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
இருப்பினும், தற்போது, வங்கி கணக்கு, போன் நம்பர் ஆகியவைக்கு ஆதார் எண் இணைக்க கடைசி நாள் நெருங்கி விட்டது. டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட ஆதார் இணைப்புகள் :
1. பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டால், வருமான வரி தாக்கல் செய்ய இயலாது.
2. வங்கிக்கணக்குகளுடன் ஆதார் எண்ணை வேண்டும். இல்லையேல், வங்கிகணக்குகள் செயல்படாமல் முடக்கி வைக்கப்படும்.
3. பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் கணக்குகளுடன் ஆதார் எண் வேண்டும். இணைக்கா விட்டால், அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்படும்.
4. இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையேல், அதன் பின் பாலிசி முடங்கி விடும்.
5. தபால் நிலைய திட்டங்கள், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, பத்திரங்கள் அனைத்தும் இணைக்க வேண்டும் . அதன் பின் அவை அனைத்து கணக்குள் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.
6. தொலைபேசி எண்கள், மொபைல் போன் எண்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கு 2018 பிப்ரவரி 6ம் தேதி கடைசி நாள். அதன் பின் தொலைபேசி எண் செயல்படாது.
7. சமையல் எரிவாயு, ரேஷன் உள்ளிட்ட மானியங்கள் பெற ஆதார் எண் இணைப்பதற்கு இறுதி நாள் 2018 மார்ச் 31ம் தேதி இறுதி நாள். அதன் பின் மானியம் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் போகக்கூடும்.
இவற்றிற்கு கொடுக்கபட்ட காலஅவகாசத்துக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் இல்லையேல் அவை செயல்படாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளன.