கார் ஓட்டுனரை தாக்கிய காவல் அதிகாரியின் மகள்!கார் ஓட்டுனரின் மனைவி முதலமைச்சரை சந்தித்து முறையீடு!
ஆயுதப்படை போலீஸ் ஏடிஜிபியிடம் கேரளாவில் கார் ஓட்டுனராக பணிபுரியும் கவாஸ்கர் என்பவர், காரை தாமதமாக கொண்டு வந்ததற்காக, காவல் அதிகாரியின் மகள் செல்போனால் சரமாரியாக அடித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு, ஓட்டுனர் தம்மிடம் அநாகரீகமாக நடந்துக் கொண்டதாக அதிகாரியின் மகள் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து இருவர் மீதும் காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். காயம் அடைந்த கார் ஓட்டுனர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே, கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை சந்தித்த கார் ஓட்டுனரின் மனைவி, தம் கணவர் மீது பொய்வழக்கு புனையப்பட்டுள்ளதாக புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.