காந்திய கொள்கைகள் மற்றும் கிராமப்புற மேம்பாடு உருவாக்கப்பட வேண்டும் : எடப்பாடி..!
புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றத்தின் நான்காவது ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உலகளாவிய அளவில் கருத்துக்கணிப்பு நடத்தி, பசுமையை பாதுகாக்கும் சேவையில் ஈடுபடும் சிறந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மத்திய அரசின் சார்பில் நோபல் பரிசுக்கு இணையாக ஆண்டுதோறும் பசுமை பூமி விருது அளிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட தேவையான நடவடிக்கைகளுக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த பழனிசாமி, மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியத்துக்கு கூடுதல் தொகுப்பு நிதியாக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் இயங்கிவரும் காந்திகிராம் கிராமப்புற பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும். 500 கோடி ரூபாய் செலவில் காந்திய கொள்கைகள் மற்றும் கிராமப்புற மேம்பாடு தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கான ஆராய்ச்சி மையம் அங்கு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.