காதல் திருமணம் செய்த மகளை ஒரு வருடம் கழித்து வெட்டிக்கொலை செய்த குடும்பம்..!

Default Image

வேறு சாதி பையனை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை மத்திய பிரதேச மாநிலம் பர்வானி பகுதியில், சொந்த குடும்பத்தினரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பர்வானி பகுதியில் சர்ளா மாலி மற்றும் பங்கஜ் மாலி ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு சர்ளா மாலியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டர். திருமணம் செய்த இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் தனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி நேற்று சர்ளாவை அவரது சகோதரன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் இன்று காலையில் சர்மிளா கொலை செய்யப்பட்டுவிட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சர்ளாவின் தந்தை தேவிதாஸ் கோலி (55), தாய் துளசிபாய் (50) மற்றும் சர்ளாவின் சகோதரர் ஹிராலால் (25) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இவர்கள் மூவர் மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 302 கீழ் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்திவருகின்றனர். மேலும் சர்ளாவின் கொலைக்கு உடந்தையாக இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்