காதல் ஒரு உள்ளுணர்வு..!காதலித்து ஓடிப்போன மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் சேர்ப்பு..!
கொச்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவன் – மாணவி தன் காதலுக்கு தங்களது குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறி ஓடிப்போய் திருமணம் செய்தனர்.இதற்கு கல்லூரி நிர்வாகம் அவர்கள் மீது ஒழுக்க நடவடிக்கை எடுத்து கல்லூரியை விட்டு நீக்கியது.
இதற்கு எதிராக அவர்கள் தொடர்ந்த வழக்கில் காதலுக்கு கண் இல்லை என்றும், காதல் ஒரு உள்ளுணர்வு என்றும் தெரிவித்த நீதிபதிகள், காதல் தனிமனித சுதந்திரம் என்று கூறினர்.காதல் என்பது சிலருக்கு ஏற்புடையதாகவும், சிலருக்கு பாவமாகவும் தெரியலாம் என்று கூறிய நீதிபதிகள், கல்லூரியின் விதிகளைச் சார்ந்து காதலுக்கு எதிராக நிற்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இருவரையும் கல்லூரியில் அனுமதிக்க உத்தரவிட்டனர்.