காதலில் விழுந்ததால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை…!காதல் கதையை விடைத்தாளில் எழுதி வைத்த மாணவன்..!திகைப்பில் ஆசிரியர்கள் ….
விடைத் தாளில் காதலில் விழுந்ததால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் எழுதி வைத்துள்ளான்.
உத்தரப்பிரதேசத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு மாணவன், தனது தேர்வு தாளில் காதல் கதையை எழுதி வைத்துள்ளான். தான் பூஜா என்ற பெண்ணை காதலிப்பதாகவும், காதலில் விழுந்ததால் தேர்வுக்காக படிக்க முடியவில்லை என்றும் மனமுருக எழுதியுள்ளான்.
மற்றொருவனோ, விடைத் தாளில் ரூபாய் நோட்டுகளை சேர்த்து வைத்து தன்னை எப்படியாவது தேர்ச்சி பெறச் செய்து விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளான். தனக்கு தாய் இல்லை ; தந்தை மட்டுமே இருக்கிறார், தேர்ச்சி பெறவில்லை என்றால் கொன்று விடுவார் என்றும் ஒரு மாணவன் வித்தியாசமாக எழுதி வைத்திருக்கிறான். விடைத் தாள்களை திருத்தும் போது இவற்றை எல்லாம் பார்த்து ஆசிரியர்கள் திகைத்துப் போயினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.