காதலனுக்காக போதைப்பொருள் கடத்திய கல்லூரி மாணவி கைது..!
மேற்கு வங்காளம் மாநிலம் பரசாத் பகுதியைச் சேர்ந்தவர் சுஷ்மிதா மாலாகர்(22). கல்லூரியில் பயின்று வரும் இவர் பாகிராத் சர்கார் என்பவரை காதலித்து வருகிறார்.
சர்கார் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு டம் டம் மத்திய சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை சர்காரை பார்ப்பதற்கு சுஷ்மிதா சென்றார். அப்போது தனது காதலனுக்கு கொடுப்பதற்காக ஹெராயினை கொண்டு சென்றார்.
அவரை சோதனை செய்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று பல முறை நடத்தப்பட்ட சோதனைகளில் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள், செல்போன் மற்றும் சமையல் பொருட்கள் கடத்திச் செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்படுவர்.
ஆனால், தனது காதலனுக்கு ஒரு கல்லூரி மாணவி ஹெராயின் கடத்திச் சென்றது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.