காட்டுராணியாக மாறிய இல்லத்தரசி..!

Default Image

காடு – மரங்களை வெகுவாக நேசிக்கும் பெண் ஒருவர் ஒடிசா மாநிலம் மாயூரபஞ்ச் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

மரங்கள் தான் தனது பிள்ளைகள் எனக்கூறும் பெங்கோ என்பவர், காடுகளின் மீது அபாரமான பிரியம் வைத்துள்ளார். இதற்கு எந்த புராணக்கதையையும் வரலாற்றையும் அவர் கூறவில்லை. சுமார் 20 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் காட்டுராணியாக இவர் உலா வருகிறார்.மரங்கள் மிகுந்த அப்பகுதியில் 1980க்குப் பின்னர் மரம் வெட்டிகளால் ஒரு மரம் கூட இல்லாத நிலை உருவாகியது.

இதனால் கண்ணீர் விட்டு அழுத பெங்கோ என்ற அந்தப் பெண் தமது கணவருடன் இணைந்து மரங்களின் ஆணி வேர்களைத் தேடி மீண்டும் அவற்றை வளர்ப்பதில் அக்கறை காட்டினார்.

வெட்டிய மரங்கள் இருந்த இடத்திலேயே மீண்டும் விதைகளை நட்டார். மழைநீர் பட்டு விதைகளில் இருந்து அந்த துளிர்கள் மீண்டும் துளிர்த்ததால் நம்பிக்கை கொண்ட பெங்கோ, தமது வாழ்க்கையை வனத்திற்காகவே அர்ப்பணித்துள்ளார். இன்று மீண்டும் மரங்களுடன் காட்சியளிக்கும் அந்த வனத்தை பராமரித்து வரும் இவர் ஒரு இலையைக் கூட பறிக்க யாரையும் அனுமதிப்பதில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்