காங்-மதசார்பற்ற ஜனதா தளம் பொது செயல் திட்டத்தை உருவாக்க திட்டம்!
மதசார்பற்ற ஜனதா தளமும் காங்கிரசும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து பொது செயல்திட்டம் உருவாக்குவதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளன.
இக்குழுவில் இடம் பெற்ற துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, காங்கிரஸ் மாநில தலைவர் வேணுகோபால் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகிய 3 காங்கிரஸ் தலைவர்கள், முதலமைச்சர் குமாரசாமி, குன்வர் தனிஷ் அலி ஆகிய இரண்டு மதசார்பற்ற ஜனதா கட்சித் தலைவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான பொதுசெயல் திட்டத்தை உருவாக்க உள்ளதாக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.
இன்னும் ஒரு வாரத்திற்குள் கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் ஆலோசனையுடன் அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு விவகாரம் சுமுகமாக தீர்க்கப்படும் என்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.