கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன அலுவலகத்தில் காங்கிரஸ் சின்னம் – ஸ்மிருதி இராணி ட்விட்டரில் பதிவு…!!
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சின்னம் இருப்பது போன்ற புகைப்படத்தை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடி அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துடன் காங்கிரசுக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜ.க கூறி வருகிறது.
இந்த நிலையில் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தமது ட்விட்டர் பக்கத்தில், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. Alexander Nix அலுவலக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் கைச்சின்ன புகைப்படம் நிக்ஸ்-ன் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது. இதை வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,