காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே கர்நாடகத்தில் அமைச்சரவை இலாகா பகிர்தலில் இழுபறி!
ஒருமனதாக,கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக குமாரசாமி மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மொத்தம் 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆயினும் துணை முதலமைச்சர் பதவிக்காக காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதே போல் நிதியமைச்சர் பொறுப்பை குமாரசாமியே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது காங்கிரசில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய அமைச்சர் இலாக்காக்களை ஒதுக்குவதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த எண்ணிக்கையில் வெறும் 37 எம்.எல்.ஏக்களை கொண்ட மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த காங்கிரஸ் 78 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய கட்சியாக இருப்பதால் அமைச்சரவை இலாக்காகளில் முக்கியப் பங்களிப்பை கோரிவருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.