பிரதமர் நரேந்திர மோடி , தேர்தல்களின்போது லாலிபாப் போல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
நமோ ஆப் மூலமாக, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 224 பாஜக வேட்பாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி என்பதே பாஜகவின் முழக்கமாக இருக்க வேண்டும் என அவர் அப்போது வலியுறுத்தினார். வளர்ச்சி என்பது அளவிடத்தக்கது என்பதால் அதுபற்றி பேசுவதற்கு கட்சிகள் அஞ்சுவதாக, காங்கிரசை பிரதமர் மறைமுகமாக சாடினார்.
ஜாதியை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்பவர்களுக்கு வளர்ச்சி என்பது ஒரு பிரச்சனையே அல்ல என்றும், ஒவ்வொரு தேர்தல்களின்போதும் ஒவ்வொரு சமூகத்திற்கும் லாலிபாப் போல பொய்யான வாக்குறுதிகளை அளிப்பார்கள் எனவும் மோடி குற்றம்சாட்டினார்.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 4 ஆண்டுகளில் கர்நாடகம் அடைந்த வளர்ச்சியையும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 4 ஆண்டுகளில் கர்நாடகம் அடைந்த வளர்ச்சியையும் ஒப்பிட்டும் பிரதமர் மோடி பேசினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…