காங்கிரஸ்- பா.ஜ.க இடையே கர்நாடகத்தில் சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி..!
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.கவும், காங்கிரசும் மோதுகின்றன. அந்த பதவிக்கு பா.ஜ.க சார்பில் சுரேஷ்குமாரும், ஆளும் கூட்டணி சார்பில் காங்கிரசின் ரமேஷ்குமாரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் வெள்ளிக்கிழமை அன்று காலையில் கூடும் சட்டப்பேரவையில் சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. இதன் பின்னர் மாலையில் முதலமைச்சர் குமாரசாமி கொண்டு வரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான சிவகுமாரும், அவரது தம்பியும் எம்.எல்.ஏகள் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து வெளியேறி உள்ளதால், அந்த கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை நடைபெறும் சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்படக் கூடுமென தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்