கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சிக்கே தான் கடன்பட்டிருப்பதாகவும், கர்நாடகத்தின் ஆறரை கோடி மக்களுக்கு அல்ல என்று கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயக் கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றார். மாநிலத்தின் நிதிநிலைமையை புரிந்துகொண்டு, அந்த முடிவை எடுப்பதற்கு குறைந்தது ஒரு வார காலம் தேவை என்றும் அவர் கூறினார்.
கடன் தள்ளுபடி அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகே சாத்தியம் என்றும் குமாரசாமி குறிப்பிட்டார். விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட முடியவில்லை எனில் தாமே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்றும், எனவே ராஜினாமா செய்யுமாறு யாரும் கோரவேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முடிவுகளை உடனே எடுப்பதற்கு, தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை வழங்குமாறு தான் கேட்டதாகவும், அவ்வாறு கிடைக்காததால் காங்கிரசின் கருணையை சார்ந்திருக்கும் நிலை உருவாகியிருப்பதாகவும் குமாரசாமி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…