காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகல்!
ராஜ் பாப்பர் உத்தரப்பிரதேச மாநிலக் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர், புல்பூர் ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் இருபதாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்று வைப்புத் தொகையை இழந்தனர். இதற்குப் பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராஜ் பாப்பர் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கோரக்பூரில் 46ஆயிரம் வாக்குகளும், புல்பூரில் 56ஆயிரம் வாக்குகளும் பெற்றது குறிப்பிடத் தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.