காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி..
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தி.மு.க. சார்பில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வார் என்றும், மதசார்பின்மை, சோஷியலிசம் மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றின் பெருமைகளை மீட்டெடுப்பார் என்றும் நம்புகிறேன்.இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கூறியுள்ளார்.
I congratulate Thiru. Rahul Gandhi on his elevation as the President of INC, on behalf of DMK. Am confident that he will fulfill the aspirations and hopes of the people and restore the glory of Secularism, Socialism and Federalism. @OfficeOfRG
— M.K.Stalin (@mkstalin) December 16, 2017
திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து செய்திக்கு பதில் அளிக்கும் வகையில் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ” நீங்கள் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி ஸ்டாலின் ஜி” என அவர் பதிவிட்டு இருந்தார்.
Thanks for your wishes, Stalin ji https://t.co/CNHpEwZagd
— Rahul Gandhi (@RahulGandhi) December 16, 2017