ரபேல் விவகாரத்தில் அவதூறு பரப்பி வரும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் விமானங்களின் விலைகள் பொது கணக்கு தணிக்கை குழுவிடம் தெரிவிக்கப்பட்டு, அதனை நாடாளுமன்ற கணக்குக் குழு ஆய்வு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியதை சுட்டிக்காட்டி இருந்தது.
ரபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆன, ரபேல் விமான ஒப்பந்தத்தில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவல் அளித்துவிட்டதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் அவதூறு பரப்பி வரும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளைஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…