காங்கிரஸுடன் கர்நாடக பட்ஜெட் தொடர்பாக மோதல்!மோதல் உண்மைதான் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி விளக்கம்
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி,கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் மோதல் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். கர்நாடக மாநில பட்ஜெட்டை அடுத்த மாதம் 5-ஆம் தேதி தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்ய என்ன அவசியம் என்றும் அடுத்த ஆண்டு குமாரசாமி அரசு தொடர்ந்தால் பட்ஜெட் தாக்கல் செய்யலாம் என பேசிய வீடியோ வெளியானது.கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, செய்தியாளர்களிடம் பேசிய போது, சிலர் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என்று கூறுவதாகத் தெரிவித்தார்.
கூட்டணி அரசின் பல உறுப்பினர்கள் பட்ஜெட் தொடர்பாக குழப்பம் விளைவிப்பதாகத் தெரிவித்த அவர் தான் யாருடைய கருணையிலும் இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.