கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸார் மத்தியிலும், வாக்காளர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தவே வேட்பாளர் பெயர் அடங்கிய போலி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே 12-ம் தேதி நடைபெறுவதால் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. எதிர்க்கட்சிகளான பாஜகவும், மஜதவும் ஏற்கெனவே முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் இன்னும் சில தினங்களில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.