காங்கிரஸார் மத்தியிலும், வாக்காளர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தவே போலி வேட்பாளர் பட்டியல்…! சித்தராமையா

Default Image

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸார் மத்தியிலும், வாக்காளர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தவே வேட்பாளர் பெயர் அடங்கிய போலி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என  குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே 12-ம் தேதி நடைபெறுவதால் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. எதிர்க்கட்சிகளான பாஜகவும், மஜதவும் ஏற்கெனவே முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் இன்னும் சில தினங்களில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

கர்நாடகாவில் மும்முனைப் போட்டி நிலவுவதால் வேட்பாளர்களை இறுதி செய்வதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரம் காட்டிவருகிறது. இதற்காக முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநில தலைவர் பரமேஷ்வர், மேலிடத் தலைவர் வேணுகோபால், காங்கிரஸின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெயர்கள் அடங்கிய‌ பட்டியல் நேற்று சமூக வலைதளங்களில் கசிந்தது. இதனால் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் இன்னும் இறுதி செய்யவில்லை. ஆனால் சிலர் திட்டமிட்டே போலி பட்டியலை பரப்பி வருகின்றனர். இந்த போலி பட்டியலை யாரும் நம்ப வேண்டாம். இதன் மூலம் கட்சியினர் மத்தியிலும், வாக்காளர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்” என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்