அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் புகழ்பெற்ற நியூசியம் உள்ளது. இந்த அருங்காட்சியகமானது பத்திரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. பத்திரிக்கை துறைக்காக உயிரை விட்ட சில பத்திரிக்கையாளர்களை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்படுவர்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பத்திரிகையாளர்களில் 2 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் தனது வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவர் ஜாதி போன்ற அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சுதிப் டத்தா பவுமிக் போலீஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஊழலுக்கு எதிராக போராடி வந்தார்.
18 பத்திரிக்கையாளர்களில் 8 பேர் பெண்கள் ஆவர். மேலும், பத்திரிகையாளர்கள், எடிட்டர், போட்டோகிராபர் மற்றும் பிராட்காஸ்டர்ஸ் போன்ற பிரிவுகளில் பணிபுரிந்து உயிரை விட்ட 2,323 பேருக்கு நினைவு கண்ணாடி பேனல் வைக்கப்பட்டது. அதில் 80 பேர் இந்திய பத்திரிகையாளர் ஆவர்
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…