களைகட்டத் தொடங்கிய கர்நாடக சட்டசபை தேர்தல்!முன்னாள் முதல்வர் எடியூரப்பா வேட்புமனு தாக்கல்!
முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர்,கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா, ஷிவமோகா மாவட்டம் ஷிகரிபுரா தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். சத்தீஸ்கர் முதல்வர் ரமன்சிங், மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட கர்னாடக சட்டசபைக்கு, மே 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கடந்த 2008ம் ஆண்டு நடந்த தேர்தலில், 150 இடங்களில் வெற்றி பெற்று, தென்னிந்தியாவில் முதல்முறையாக பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து எடியூரப்பா முதல்வரானார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.