களமிரங்கும் காங்கிரஸ்……மத்தியபிரதேச வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது..!!
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட களமிரங்கும் 155 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அதிரடியாக வெளியிட்டுள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தான் காங்கிரஸ் 155 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிள்ளது.
பாஜக ஆட்சி செய்யும் மத்தியப்பிரதேசத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் நவம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வரும் டிசம்பர் 11-ம் தேதி நடைபெறும் என்றும் மேலும் அன்றைய தினமே மத்தியப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில் அங்கு ஆளுங்கட்சி ஆட்சியை தக்கவைக்க பாஜகவும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி வருகின்றது. இந்த நிலையில் வேட்பாளர் பட்டியலை முதற்கட்டமாக வெளியிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங்கின் மகன் ஜெய்வர்தன் சிங் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU