காஷ்மீரில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ,இளைஞர்கள் வீசியெறியும் ஒவ்வொரு கல்லும், கையில் எடுக்கும் ஆயுதமும் மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். லே நகருக்குச் சென்ற அவர், 6 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் லே- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் அமைய உள்ள 14 கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதை பணிகளையும் தொடங்கி வைத்தார். பனிக்காலங்களில் லே-லடாக் இடையிலான பாதை மூடப்படுவதால் இந்த சுரங்கப்பாதை நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க உதவும் என்றும் அப்போது பிரதமர் பேசினார்.
காஷ்மீரில் ராணுவத்தினர் மீது இளைஞர்கள் கல்வீசுவதைக் கண்டித்த மோடி, வழிதவறிய இளையவர்களை குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் நல்வழிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இளைஞர்கள் வீசியெறியும் ஒவ்வொரு கல்லும், கையில் ஏந்தும் ஒவ்வொரு ஆயுதமும் அவர்களைத்தான் காயப்படுத்தும் என்றும் மோடி எச்சரித்தார். ரமலான் நோன்பை முன்னிட்டு சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மோடி, கடந்த முறை தீபாவளிக்கு தாம் காஷ்மீர் வந்ததாகவும் இந்த முறை ரமலானுக்குமுன்பு காஷ்மீர் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
புத்தமத தலைவரான 19-வது குஷோக் பக்குலா ரிம்போச் சேவின் நூற்றாண்டு பிறந்த தின விழாவில் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீநகர் வந்த மோடி, அங்கு கிஷண்கங்கா நீர் மின்நிலையத்தை அவர் திறந்து வைத்தார். ஸ்ரீநகர் வட்டச்சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். மேலும் வைஷ்ணவ தேவி மலைக்கோவிலுக்கு இழுவை விஞ்ச் சேவைக்கான திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…