பீகார் அரசு பிளஸ் 2வில் கல்யாணம் ஆகாமல் தேர்ச்சி பெரும் மாணவிகளுக்கு 10,000 ரூபாவை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
பீகாரில் முதலமைச்சர் பெண்கள் மேம்பாட்டு திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி,பெண் குழந்தையின் பிறப்பு முதல் பட்டம் பெற்ற வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் கீழ், பிளஸ் 2வில் கல்யாணம் ஆகாமல் தேர்ச்சி பெரும் மாணவிகளுக்கு ரூ .10,000 உதவித்தொகை வழங்கப்படும். பீகாரில் பிளஸ் -2 பரீட்சை முடிவுகள் ஜூலை 6ஆம் தேதி வெளியாக உள்ளன. ரூ .10,000 வழங்குவதற்காக பிளஸ் 2 வகுப்புக்கு தேர்ச்சி பெறும் திருமணமாகாத மாணவிகளின் பட்டியலை தயார் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘திருமணமாகாத பிளஸ் 2 மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை கல்வியை ஊக்குவிக்க, குழந்தை திருமணத்தை தடுக்க, மற்றும் பெண்கள் கல்வி மூலம் மக்கள் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கவும் உதவித்தொகை வழங்கப்படும்.கல்யாணம் முடிந்தாலும் பட்டதாரி பெண்களுக்கு 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ‘கல்வி செயலாளர் ஆர்.கே. மோகன் தெரிவித்தார்.