ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே’… இந்த பாடல் வரிகளுக்கு உயிரூட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து விபரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் உல்லாஷ் நகரை சேர்ந்தவர் என்.பி. பட்டில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகள் பிரஞ்ஜாலின் பட்டில். இவர் 2 வயதாக இருந்தபோது காய்ச்சலால் 2 கண்களின் பார்வை பறிபோனது.
இருந்தாலும் பெற்றோர் மகளுக்கு தைரியமும், ஊக்கமும் கொடுத்து வளர்த்தனர். பிரஞ்ஜாலின் பட்டில் வளர வளர சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் வந்தது. படிப்பிலும் தீராத தாகம் இருந்த அவர் தொடுதிரை உதவியுடன் நன்கு படித்து வந்தார். மும்பை கல்லூரியில் பட்டப்படிப்பை முடிதார்.
பின்னர் டெல்லியில் உள்ள சர்வதேச கல்லூரியில் எம்.பில். மற்றும் பி.எச்.டி. டாக்டர் பட்டம் முடித்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.தேர்வு எழுதினார். 773-வது இடமே கிடைத்ததால் அவரால் கலெக்டர் ஆக முடியவில்லை. அதே நேரத்தில் ரெயில்வே துறையில் தேர்வாகி கணக்கு பிரிவில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அவரது லட்சியமான கலெக்டர் கனவு அவரை வாட்டியது.
தேர்வில் வெற்றி பெற்ற அவர் நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றார். தனக்கு ஊக்கமும், தைரியமும் கொடுத்து வளர்த்த தனது தாய் தன்னை இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார்.
நெகிழ்ச்சியடைந்த அதிகாரிகள் அதற்கு அனுமதியளித்தனர். அதன்படி அவரது தாய் ஜோதி மகளை கலெக்டர் இருக்கையில் அமர வைத்தார். நேரடி கலெக்டர் தேர்வில் இந்தியாவிலேயே கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கலெக்டராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…