ஒடிசாவில் சாசன் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் அவளை மிரட்டி கற்பழித்தது. இதனால் அவமானம் அடைந்த அவள் தற்கொலை செய்து கொண்டாள்.
சம்பல்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்ஷல் ராஜா, டினு சாஹூ, ஹாடு பஞ்சாபியர், ஆசீர்வாத் பெகரா, அபிலாஷ் பஞ்சாபிசர் மற்றும் சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது விரைவு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து 15 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் குற்றவாளிகள் அப்ஷல் ராஜா, டினு சாஹூ உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கற்பழிப்பு வழக்கில் கைதான 6-வது குற்றவாளி சிறுவன் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.
கற்பழிப்பு சம்பவம் கடந்த மாதம் (மே) 2-ந்தேதி நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு நியாயம் வேண்டியும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் சம்பல்பூர் போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் அரோராஅதிதீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டார். அதன் விளைவாக சம்பவம் நடந்த 30 நாளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…