கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி கோபம்..!!
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோபமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
பதவியேற்பு விழாவுக்கு வரும் வழியில் மம்தா பானர்ஜியின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் பதவியேற்பு நடைபெற்ற இடத்தை அடைய சிறிது தூரம் நடக்க நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பதவியேற்பு விழா நடைபெற்ற இடத்தில் கர்நாடக காவல் துறை இயக்குநரிடம் மம்தா பானர்ஜி தனது கண்டனத்தை தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அங்கிருந்த தலைவர்களிடமும் தான் நடந்து வர நேர்ந்ததை எடுத்துரைத்த மம்தா பானர்ஜி பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பி மேடையில் இருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்