கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று பிரதமரை சந்திக்கிறார்!
இன்று மாலை கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்க உள்ளார்.
விவசாயக் கடன்கள் 53 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய குமாரசாமி நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். விவசாயிகள் யாரும் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ள குமாரசாமி, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். கர்நாடகத்திற்கு கூடுதல் நிதியுதவியைக் கோருவதுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்தித்து மின் உற்பத்திக்காக நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்கும்படியும் கோருவார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.