வரும் புதன்கிழமை பகல் 12 முதல் 2 மணிக்குள் கண்டிரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாளை பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், நாளை ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பதால் 23 -ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என குமாரசாமி அறிவித்தார்.இதேபோல் 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் இரண்டு நாட்கள் மட்டும் முதலமைச்சராக நீடித்த எடியூரப்பா தமது பதவியை ராஜினாமா செய்த சிறிது நேரத்தில், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, ஆளுநர் தம்மை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பதவியேற்பு விழாவுக்கு சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 15 அமைச்சர் பதவிகளும், காங்கிரசுக்கு 16 அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. துணை முதலமைச்சராக கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா பதவியேற்பார் என்றும், நிதியமைச்சர் பொறுப்பை குமாரசாமியே வைத்துக் கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பதவியேற்பு விழாவை 23ம் தேதி நடத்த காங்கிரஸ் -மதசார்பற்ற ஜனதா தள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…