இங்கிலாந்து வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் ,விஜய் மல்லயாவை இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தக் கோரிய வழக்கில் சி.பி.ஐ. அளித்த ஆவணங்களை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் பதுங்கியுள்ளார்.
அவரை நாடுகடத்தி இந்தியாவுக்கு அனுப்புமாறு லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தை இந்தியா நாடியுள்ளது. இவ்வழக்கில் ஜாமினில் உள்ள விஜய் மல்லயா இன்றைய விசாரணையில் ஆஜரானார். அப்போது சி.பி.ஐ. தரப்பில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் மேலும் ஆவணங்கள் சி.பி.ஐ. தரப்பில் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மல்லயாவுக்கு சிறப்பு சிறை அறை வழங்குவது குறித்த ஆலோசனையையும் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கூறியுள்ளது. இவ்வழக்கில் ஜூலை 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்மல்லயா கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தனக்கு உரிமை உள்ளதாகவும், ஜாமின் நிபந்தனைகளால் இந்தியா வர இயலவில்லை என்றும் கவலை தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…