கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க எனக்கு ஆசைதான்!நிபந்தனைகளால் இந்தியா வர இயலவில்லை!விஜய் மல்லயா வருத்தம்

Default Image

இங்கிலாந்து வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் ,விஜய் மல்லயாவை இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தக் கோரிய வழக்கில் சி.பி.ஐ. அளித்த ஆவணங்களை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் பதுங்கியுள்ளார்.

அவரை நாடுகடத்தி இந்தியாவுக்கு அனுப்புமாறு லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தை இந்தியா நாடியுள்ளது. இவ்வழக்கில் ஜாமினில் உள்ள விஜய் மல்லயா இன்றைய விசாரணையில் ஆஜரானார். அப்போது சி.பி.ஐ. தரப்பில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் மேலும் ஆவணங்கள் சி.பி.ஐ. தரப்பில் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மல்லயாவுக்கு சிறப்பு சிறை அறை வழங்குவது குறித்த ஆலோசனையையும் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கூறியுள்ளது.  இவ்வழக்கில் ஜூலை 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்மல்லயா கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தனக்கு உரிமை உள்ளதாகவும், ஜாமின் நிபந்தனைகளால் இந்தியா வர இயலவில்லை என்றும் கவலை தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்