கர்நாடக சட்டமன்றத் தேர்தல் : பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மே 1 முதல் 8-ம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்!
பிரதமர் நரேந்திர மோடி மே 1 முதல் 8-ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்ள கர்நாடகாவுக்கு வருகிறார்.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த (மே மாதம்) மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 17-ந்தேதி தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் 72 பேர் பட்டியலை பா.ஜ.க.மேலிடம் கடந்த 9-ந்தேதி அன்று வெளியிட்டது.
ஏற்கனவே பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடக மாநிலம் முழுவதும் தொடர்ந்து சூறாவளி சுற்று பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து 20 பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., ம.ஜ.த. ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க.வை வெற்றி பெற செய்வதற்காக பிரதமர் மோடி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 1 முதல் 8-ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்ள கர்நாடகாவுக்கு வருகிறார்.
தேர்தலின் கடைசி நேரத்தில் பிரதமர் மோடியின் பிரசாரம் மக்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.