கர்நாடக இடைதேர்தல் முதல்வர் குமாரசாமி மனைவி வெற்றி…!!
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.இந்த ஆட்சி காங்கிரஸ் கூட்டணியில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கர்நாடகாவில் 2 தொகுதிகள் காலியாக உள்ளன இந்த காலியாக உள்ள தொகுதிகளான ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும் மற்றும் ராம்நகரம் ஜமகண்டி உள்ளிட்ட் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நவ.3 தேதி இடைத்தேர்தல் நடந்தது.
இந்த தொகுதிகளான வேட்பாளர்களா கஷிவமொக்கா தொகுதியில் பாஜக சார்பில் பி.எஸ்.ஒய். ராகவேந்திரா மற்றும் ராம்நகரம் சட்டப்பேரவை தொகுதியில் மஜத வேட்பாளராக ஆளுகின்ற முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி களத்தில் இருந்தார்.நவ.3 தேதி காலை 7 மணி நேரடிப்படி வாக்குப்பதிவு தொடங்கியது.
தொடர்ந்து மாலை 6 மணி வரை இந்த தேர்தல் நடந்த இடை தேர்தல் நடக்கும் 5 தொகுதிகளிலும் மொத்தம் 54 லட்சத்து 54 ஆயிரத்து 275 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 6 ஆயிரத்து 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 6ம் தேதியான இன்று எண்ணப்பட்டது.
அதில் ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா வெற்றிபெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ராம்நகர் சட்டமன்ற தொகுதியில் மஜத வேட்பாளரும், முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா குமாரசாமி 1,09,137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.மேலும் பெல்லாரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா முன்னிலை வகித்து வருகிறார்.இவர் பாஜக வேட்பாளர் சாந்தாவை விட 1.28 லட்சம் வாக்கு முன்னிலை வகிக்கிறார்.
DINASUVADU