கர்நாடக அரசுக்கு பிரச்சினையா …!காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் வெளியேற்றமா …! துணை முதலமைச்சர் கருத்து
கர்நாடக அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக கர்நாடகா அரசு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா கூறுகையில்,கர்நாடக அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை.காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் யாரும் வெளியேறமாட்டார்கள். மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி சிறந்த நிர்வாகத்தை அளிப்போம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.