Categories: இந்தியா

கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையத்திற்கு பிரதிநிதியை பரிந்துரைக்க மத்திய அரசு 2 நாட்கள் கெடு!

Published by
Venu

மத்திய அரசு காவிரி ஆணையத்திற்கு பிரதிநிதியை பரிந்துரைக்க கர்நாடக அரசுக்கு 2 நாட்கள் கெடு விதித்துள்ளது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானதையடுத்து, காவிரி ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவிற்கான பிரதிநிதிகளின் பட்டியலை அறிவிக்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி அரசுகளின் சார்பில் பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கர்நாடகா மட்டும் இதுவரை பிரதிநிதிகள் பெயர்களை அறிவிக்கவில்லை. இதையடுத்து, குறுவை சாகுபடிக்கு உடனடியாக நீர் கிடைக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், கர்நாடக அரசு இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது பிரதிநிதிகளை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 12ம் தேதிக்குள் கர்நாடக அரசு தனது பிரதிநிதிகளை நியமித்தால் காவிரி ஆணையத்தின் முதல்கூட்டத்தை அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டுவது குறித்த தேதி முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

டெல்லி :  விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…

2 hours ago

பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் சர்ச்சை பேச்சு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…

3 hours ago

“தண்டனையை நிறுத்தி வைங்க” அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!

நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…

3 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 3 பேருக்கு அனுமதியில்லை, டிவி. பேப்பரில் விளம்பரம் செய்ய வேண்டுமாம்..!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…

4 hours ago

சூர்யாவின் “ரெட்ரோ” பட ரிலீஸ் எப்போது? தேதியை குறித்த படக்குழு.!

சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…

5 hours ago

ஆபாச பேச்சு: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகாரில் தொழிலதிபர் கைது!

கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…

5 hours ago