நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.அந்த மாநிலத்தில் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்து, முதலமைச்சராக குமாரசாமி கடந்த மாதம் 23-ஆம் தேதி பதவி ஏற்றார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு, முதல்முறையாக கடந்த ஜூலை 5 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார் கர்நாடக முதல்வர் குமாரசாமி .இந்த பட்ஜெட்டில் முதல்கட்டமாக 2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார்.
இதன் பின்னர் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைமை அலுவலகமான பெங்களூருவில் கட்சியின் செயல்வீரர்கள் சார்பில் முதலமைச்சர் ,எம்எல் எக்கள்,அமைச்சர்களுக்கு பாராட்டு விழா கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பங்கேற்று பேசினார்.அப்போது பேசிய அவர்,நான் முதல்வராகி விட்டேன் உங்களில் ஒரு சகோதரன் எண்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள்,ஆனால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
முதல்வராக கூட்டணி ஆட்சியில் இருப்பது எவ்வளவு மனவேதனை என்று எனக்குமட்டும்தான் தெரியும்.இனியும் நான் பதவியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.கூட்டணி ஆட்சியில் இருந்து வரும் வலியை விஷம் போல உட்கொண்டுள்ளதாக கூறினார்.இதை கூறியதும் அவர் அழ ஆரம்பித்துவிட்டார். இதனால் என் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.மேலும் ஆண்டவன் அனுமதிக்கும் வரை பதவியில் இருப்பேன்.மக்களுக்கு நல்லது செய்வேன் என்று கண்கலங்கி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…