கர்நாடக அமைச்சரை கடிந்த நிர்மலா சீதாராமன்..!எனக்கு என் அந்தஸ்தும் முக்கியம்..!!
கர்நாடக அமைச்சர் பேச்சால் கோபமடைந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் .பொறுமையிழந்த காட்சி நிர்மலா சீதாராமன் பயங்கர வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் வெள்ளம் பாதித்த குடகு மாவட்டத்தில் ராணுவத்தின் மீட்பு, நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்ற நிர்மலா சீதாராமன், கர்நாடக அமைச்சர் மகேஷ் உள்ளிட்டோருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கர்நாடக அமைச்சர் மகேஷ் ஒரு கட்டத்தில் அதிகாரிகளை சந்திக்க போதிய நேரமில்லாததால் செய்தியாளர் சந்திப்பை முடிக்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கூறினார்.இதனால் கோபமடைந்த நிர்மலா சீதாராமன், நிகழ்ச்சி நிரலை தாம் முறையாகப் பின்பற்றுவதாகக் கூறியதுடன், உங்களுக்கு அதிகாரிகள் முக்கியமானவர்கள் என்றால், தனக்கு தனது பரிவாரமும் முக்கியம் என்று குறிப்பிட்டார். அவர் பேசும்போது மைக்கில் பதிவாகிறது என அவரிடம் கூறியபோது, பரவாயில்லை பதிவாகட்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
DINASUVADU